கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் திங்கள் கிழமைகளில் மனுக்கள் கொடுக்க பொதுமக்கள் அதிகமாக வருகின்றனர்.
தற்போது கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது. ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் தங்களுடைய மனுக்களை கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் கலெக்டர் அலுவலகத்தில் தீயணைப்பு வீரர்கள் தீயணைப்பு வாகனத்துடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.