ஓய்வூதிய திட்டத்தில் பயன்பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என்று கலெக்டர்
தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் வருவாய் துறையின் சார்பில் ஓய்வூதிய திட்டங்கள்
செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்திராகாந்தி தேசிய முதியோர் ஓய்வூதிய திட்டம், இந்திராகாந்தி
தேசிய விதவை ஓய்வூதிய திட்டம், விதவை ஓய்வூதிய திட்டம், கணவரால் கைவிடப்பட்டோர் ஓய்வூதிய
திட்டம், முதிர்கன்னிகள் ஓய்வூதிய திட்டம், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டம், இந்திராகாந்தி
தேசிய மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதிய திட்டம் ஆகிய 8 வகையான ஓய்வூதிய திட்டங்கள் நடைமுறை
படுத்தப்பட்டு வருகிறது. ஓய்வூதிய திட்டங்களுக்கான விண்ணப்பங்கள் வருவாய் துறையினரால் நேரடியாக
பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தன.
தற்போது மின்னாளுமை முகமை ஆணையரின் கடிதத்தின்
படி உதவித்தொகை வாய்ப்பு கோரும் குறிப்பிட்டுள்ள 8 வகையான ஓய்வூதியத் திட்டங்களுக்கான
விண்ணப்பங்களை இ சேவை மையத்தில் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்குமாறு இயக்குநரால்
அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே முதியோர் உதவித்தொகை மற்றும் இதர உதவித்தொகைகள் வாய்ப்பு
கோரும் விண்ணப்பங்களை தங்கள் கிராமங்களுக்கு அருகில் உள்ள இ சேவை மையங்களில் ஆன்லைன்
மூலம் https://edistricts.tn.gov.in:8443/certificates csc என்ற இணையதள
முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும் என்று கலெக்டர் பிரசாந்த் வடநேரே தெரிவித்துள்ளார்.






0 Comments