கிருஷ்ணன் கோவில் அருகே சீல் வைக்கப்பட்ட பகுதியில் உள்ளவர்கள் எங்களுக்கு வேலைக்கு செல்ல முடியவில்லை என்று திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கிருஷ்ணன் கோவில் அருகே உள்ள அருந்ததியர்தெருவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அந்த பகுதிகள் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவித்து சீல் வைக்கப்பட்டது. இதனால் இங்குள்ளவர்கள் வேலைகளுக்கு செல்ல முடியாத நிலை உருவாகியது. கூலி தொழிலாளர்கள் அதிகமாக உள்ளதால் அனைவரும் திரண்டு எங்களுக்கு வேலைகளுக்கு செல்ல முடியவில்லை, அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியவில்லை என்று கோரிக்கையை வலியுறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. கோஷம்போட்டு வீடுகளை விட்டு வெளியே வந்து கூடி நின்றனர்.