கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 13 நாட்களாக பஸ்கள் ஓடாததால் வியாபாரம் குறைந்த நிலையில் வியாபாரிகள் நெருக்கடியுடன் உள்ளனர்.

கொரோனா அச்சுறுத்தல் தொடங்கி இன்றுடன் 112 நாட்கள். மத்திய மாநில அரசுகளின் ஊரடங்கு உத்தரவை மக்கள் கடைபிடித்து சமூக இடைவெளியுடன் ஊரடங்கு தளர்வுக்கு முன்வரை ஓரளவு பயமின்றி வாழ்ந்தனர். ஆனால் மக்கள் வேலை வாய்ப்புகளை இழந்து வாழ்வாதாரமின்றி ஏங்கிய நாட்கள் ஏராளம். விவசாயம் செய்யப்பட்ட காய்கறிகள் உள்பட அனைத்து விளை பொருட்களும் நாசமாயின. இதனால் விவசாயிகளை நம்பி வாழ்ந்த கூலித்தொழிலாளர்கள் நலிவடைந்தனர் .
ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலும், பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு வரை நிறுத்தப்பட்டது. தொடர்ந்து பல வாரங்கள் பஸ்கள் இயங்கவில்லை. கொரோனா வைரஸ். 2020-2021 ஆம் கல்வி ஆண்டிற்கான பாடசாலைகள் இன்னும் திறந்த பாடில்லை. ஊரடங்கின் போது பாதுகாப்பு தூய்மை பணிகளில் ஈடுபட்டவர்கள் கண்ணுறங்கவில்லை. ஊரடங்கு தளர்வுக்குப்பின் பஸ்கள் ஓடியது. கடைகள் திறந்து. சில தொழில்களும் நடந்தது. ஆனால் மக்கள் தன்னை மறந்து நடக்கத் துவங்கினர். முகக் கவசம் அணியாமல் சென்றவர்களுக்கு காவல்துறையை நகராட்சி பேரூராட்சி சார்பில் அபராதம் விதிக்கப்பட்டது. பஸ்களில் பயணம் செய்தவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் பயணம் செய்தனர்.
வெளியூர்களிலிருந்து வந்த ஒருசிலரால் வைரஸ் தொற்றி வருகிறது. வைரஸ் மருத்துவர்கள், தலைமை ஆசிரியர்கள், வங்கி ஊழியர்கள், காவல்துறையினர்களையும் விட்டுவைக்கவில்லை. ஏற்கனவே சரியான வாழ்வாதாரம் இன்றி தவித்த மக்களின் நிலையை அறிந்த அரசின் உத்தரவுப்படி மாவட்ட நிர்வாகம் ஜூலை 1 ஆம் தேதி முதல் ஊரடங்கை முடுக்கிவிட்டுள்ளது. இதனால் பஸ் போக்குவரத்து தடையானது. கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படத் துவங்கியது.
பஸ் போக்குவரத்து இல்லாததால் மாலை 6 மணிக்கு மேல் தக்கலை சுற்றுவட்டார பகுதிகள் முதல் அனைத்து பகுதிகளும் சோகமாய் காட்சியளிக்கிறது. வைரஸ் தொற்று பற்றி மக்கள் கவலை அடைந்தாலும் கூலித் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்திற்காக வேலைக்கு செல்கின்றனர். ஆனால் கடந்த பல நாட்களாக தக்கலை காமராஜ் பேருந்து நிலையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கடைகள் வெறிச்சோடி உள்ளது. கடைகளில் வியாபாரம் இல்லை. வாழ்வாதாரம் சிறிதளவு குறைந்தாலும் மக்கள் நெருக்கடியை தவிர்த்து வைரஸ் தொற்றை ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் வைக்க காரணமாக தற்போது தங்களது வாழ்வாதாரத்தை இழந்த நிலையில் செயல்பட்டு வருகின்றன.






0 Comments