ஈரான் நாட்டில் இருந்து கப்பல் மூலம் தூத்துக்குடி வந்த 535 குமரி மீனவர்கள் முகாம்களில் தனிமை படுத்தப்பட்டுள்ளனர்.

இவர்களை தங்க வைக்க குமரி மாவட்டத்தில் ஆறு முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இவர்களில் 39 பேர் தூத்தூர் புனித யூதா கல்லூரியில் தங்க வைக்கப்பட்டனர்.
இரயுமன்துறையை சார்ந்த ஒரு நபர்,பூத்துறையை சார்ந்த (17) நபர், தூத்தூர் கிராமத்தில் (6) நபர், சின்னத்துறையை சார்ந்த (3) நபர், ரவி புத்தன் துறை பகுதியை சார்ந்த (2) நபர், மார்த்தாண்டந்துறையை சார்ந்த (2) பேர், நீரோடி பகுதியில் (2) பேர் , ராஜாக்கமங்கலம் பகுதியை சேர்ந்த (6) பேர் இரண்டு பேருந்துகள் மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து அழைத்து வரப்பட்டனர்.இவர்களின் சளி மாதிரி எடுத்து ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரிக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. யாருக்காவது கொரோனா தொற்று கண்டறிய பட்டால் அவர்கள் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்க படுவார்கள் .






0 Comments