தெலங்கானா மாநிலம், நிஜாமாபாத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவரின் உடலை அடக்கம் செய்வதற்காக, எந்தவிதமான பாதுகாப்பும் இன்றி தலையும், காலும் வெளியே தெரியுமாறு ஆட்டோவில் ஏற்றிச் சென்ற அதிர்ச்சிச் சம்பவம் நடந்துள்ளது

நிஜாமாபாத் அரசு மருத்துவமனையில் 50 வயது மதிக்கத்தக நபர் கொரோனாவில் உயிரிழந்தவுடன் ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவிக்காமல், உறவினர் ஒருவர் ஆட்டோவில் உடலை எடுத்துச் சென்றுள்ளது விசாரணையில் தெரியவந்தது.
இதுகுறித்து நிஜாமாபாத் அரசு மருத்துவமனையின் கண்காணிப்பாளர் மருத்துவர் நாகேஸ்வர ராவிடம் தொலைப்பேசி வாயிலாக நிருபர் கேட்டபோது அவர் கூறியதாவது:-
' கடந்த மாதம் 27-ம் தேதி 50வயது மதிக்கத்தக்க ஒருவர் கொரோனா தொற்றால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஏற்கெனவே நீண்ட கால நோய்களான ரத்தக்கொதிப்பு, நீரிழிவு இருந்ததால், அதற்கும் சிகிச்சை எடுத்துவந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் அவர் உயிரிழந்தார்.
உயிரிழந்த அந்த 50 வயது மதிக்கத்தக்க நபர், அரசு மருத்துவமனையில் பணியாற்றும் ஊழியர் ஒருவரின் உறவினராவார். உயிரிழந்த தன்னுடைய உறவினர் உடலை தன்னிடம் ஒப்படைத்துவிடுங்கள், தான் கொண்டு சென்று அடக்கம் செய்வதாக மருத்துவமனையில் பணியாற்றும் ஊழியர் எங்களிடம் கேட்டுக்கொண்டார். அதன் அடிப்படையில் அவரிடம் உயிரிழந்தவரின் உடல் ஒப்படைக்கப்பட்டது.

ஆனால், அனைத்தையும் கண்டு கொள்ளாமல் ஆட்டோவில் உடல் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
கொரோனாவில் உயிரிழந்தவர்களின் உடல்கள் மிகுந்த கண்ணியத்துடன், மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட வேண்டும் என அறிவுறுத்தியும் எந்த சம்பவம் நடந்துள்ளது.






0 Comments