தமிழ் சினிமாவில் பருத்தி வீரன் என்னும் பெரும் வெற்றிப்படத்தை கொடுத்தவர் இயக்குநர் அமீர். அதன்பிறகு யோகி என் ற படத்தின் மூலம் நாயகனாக நடிப்பை தொடங்கிய அவர், வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான 'வட சென்னை' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அமீர் நடித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது அமீர் நாற்காலி என்னும் படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இருட்டு படத்தின் இயக்குநர் வி.இசட்.துரை இயக்கும் இப்படத்தில் அமீர் அரசியல்வாதியாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கப்பட்ட நிலையில், தற்போது இதன் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு விஜய் சேதுபதி அரசியல்வாதியாக நடிக்கும் துக்ளக் தர்பார் படத்தின் புகைப்படம் வெளியாகி வைரலானது. இரண்டு பிரபலமான நட்சத்திரங்கள் அரசியல் படங்களில் நடிப்பது ரசிகர்களிடையே அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.






0 Comments