தக்கலை போலீஸ் ஸ்டேஷனில் ஏழைகளுக்கு கபசுர குடிநீர் மற்றும் முககவசம் வழங்கும் நிகழ்ச்சியை பயிற்சய் டிஎஸ்பி துவக்கி வைத்தார்.

என்ஜேயு சங்கம் ஏழைகளுக்கு கபசுர குடிநீர் மற்றும் முக கவசம் வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. தக்கலை போலீஸ் ஸ்டேஷனில் நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட பொறுப்பாளர் ஹரிதாஸ் தலைமை வகித்தார். இன்ஸ்பெக்டர் அருள்பிரகாஷ், சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ் ஆகியோர் முன்னிலையில் பயிற்சி டிஎஸ்பி வடிவேலன் ஏழைகளுக்கு முக கவசம், கபசுரக் குடிநீர் வழங்கி கொரோனா விழிப்புணர்வு குறித்து பேசினார். நிகழ்ச்சியில் எஸ்எஸ்ஐ சேவியர் பிராங்கிளின், பிரப குமார்,ரத்தினராஜ் மற்றும் லாக்கேஷ், சசிகுமார் கலந்து கொண்டனர்.






0 Comments