தக்கலை காவல்துறை மற்றும் பத்மநாபபுரம் நகர தொழில் வணிகர் சங்கம் சார்பில் புரிந்துணர்வு மற்றும் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்தது.

தக்கலை அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் வைத்து நடந்த நிகழ்ச்சிக்கு இன்ஸ்பெக்டர் அருள்பிரகாஷ் சங்க தலைவர் ரேவன் கில் தலைமை வகித்தனர். பொதுச்செயலாளர் விஜய கோபால் கவுரவ தலைவர் முபாரக், எஸ் ஜ ரமேஷ் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கொரோனா தொடங்கி நூறு நாட்கள் முடிந்து ஜூலை ஒன்றாம் தேதி வரை தன்னலம் பாராமல் உழைத்த காவல்துறையினரின் பணி குறித்து துணைத் தலைவர் குமார் பேசினார். சங்க நிர்வாகிகள் தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள அரசு அலுவலகங்கள் முன் செயல்படும் சாலையோர கடைகளை மாற்றி அவர்களுக்கு தனி இடம் ஒதுக்கி கொடுக்கவும் ,அரசு ஆணைகளை மதித்து வணிகர்கள் நடப்பது குறித்தும் வணிகர் சங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க கடைகளை காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட உத்தரவிட்ட மாவட்ட நிர்வாகத்தின் ஆளுமை திறத்தை பாராட்டியும் பேசினர். கூட்டத்தில் பயிற்சி டிஎஸ்பி வடிவேலன் கொரோனா விழிப்புணர்வு குறித்தும், வணிகர்கள் ஒத்துழைத்த விதம் குறித்தும் பேசினார். தக்கலை இன்ஸ்பெக்டர் அருள்பிரகாஷ் ஏற்புரை வழங்கி என்றும் காவல்துறையினர் வணிகர்களின் நண்பர்கள் என பேசினார். முடிவில் செயலாளர் மோசஸ் ஆனந்த் நன்றி கூறினார்.
கூட்டத்தில் துணைச்செயலாளர் ஜஹபர் சாதிக், ஸ்ரீகுமார் தாணு மூர்த்தி, பரமேஸ்வரன், எபினேசர், ஜெயக்குமார், பத்மதாஸ், ராஜா, சுரேஷ்குமார், சந்திரமோகன், ஆடிட்டர் கணபதி , சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.






0 Comments