கன்னியாகுமரி மாவட்ட முஸ்லிம் ஜமாஅத் கூட்டமைப்பு மாவட்ட மக்களின் எதிர்கால நலன்களை கருத்தில் கொண்டு மாவட்டம் முழுவதும் நிர்வாகிகளை ஒவ்வொரு பிரிவுகளாக உருவாக்கப்பட்டு அதற்கு தகுதியான நபர்களை தேர்ந்தெடுத்து நிர்வாகிகளாக அறிவித்து வருகிறது.
அதன் தொடர்ச்சியாக கன்னியாகுமரி மாவட்ட முஸ்லிம் ஜமாஅத் கூட்டமைப்பு மாவட்ட இஸ்லாமிய பெண்களின் நலன்களை கருத்தில் கொண்டு இஸ்லாமிய சகோதரிகளுக்கு கோடை விடுமுறை வகுப்புகளும், இஸ்லாமிய பெண் குழந்தைகளுக்கு கல்விக்கான வழி வகைகளையும், ஏழ்மையான பெண் குழந்தைகளுக்கு கல்விக்கான உதவித் தொகை வழங்கவும்,
இஸ்லாமிய பெண் குழந்தைகளுக்கு மேல்படிப்புக்கு வழிவகுக்கவும்,
இஸ்லாமிய பெண் குழந்தைகள் படித்து பணியில் அமர ஆசைப்படும் பெண் பிள்ளைகளுக்கு அதற்கான வழியை இலகு ஆக்கவும், தீன் அறிவு கல்வி ஆலோசனைகளும் வழிமுறை படுத்திடவும் பெண்களுக்கு பெண்களை வைத்து அனைத்து நன்மைகளையும் நிறைவேற்றிட பெண்கள் கல்வி குழு உருவாக்கப்பட்டுள்ளது
மாவட்ட பெண்கள் கல்வி குழு தலைவியாக
டாக்டர் ஏ சபியா M.COM.M.PHIL.MBA.PHD அவர்களும்
செயலாளராக
எம்.எஸ்.ஏ.பாமிலா பேகம் M.A.M.PHIL.B.ED அவர்களும்
பொருளாளராக
S.ஸகர்பானு B.A அவர்களும்
மற்றும் 5 துணை தலைவர்கள், 5 துணை செயலாளர்கள், உள்பட 13 பேர் கொண்ட பெண்கள் கல்வி குழு உருவாக்கப்பட்டுள்ளது.
நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட விபரத்தை கன்னியாகுமரி மாவட்ட முஸ்லிம் ஜமாஅத் கூட்டமைப்பு நிர்வாக கமிட்டி வெளியிட்டது






0 Comments