கன்னியாகுமரி மாவட்ட முஸ்லிம் ஜமாஅத் கூட்டமைப்பின் மாவட்ட துணை செயலாளராக சூரங்குடி முஸ்லிம் ஜமாஅத் முன்னாள் தலைவரும் 1982 ல் குமரி மாவட்ட இஸ்லாமிய இளைஞர் பேரவையாக உருவாகி அதற்கு பின் கன்னியாகுமரி மாவட்ட முஸ்லிம் ஜமாஅத் கூட்டமைப்பாக மாற அடித்தளமாக இருந்த குமரி மாவட்ட இஸ்லாமிய இளைஞர் பேரவையின் பொதுச் செயலாளராகவும்,
1972 ல் சூரங்குடி இஸ்லாமிய இளைஞர் மன்றத்தின் செயலாளராகவும் அதற்கு பின் தலைவராகவும் , போஸ்டல் மற்றும் ஆர்.எம்.எஸ்.ன் ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் பொருளாளராகவும் மற்றும் ஒருங்கிணைப்பாளராகவும் இன்றுவரை பொறுப்பிலிருந்து வரும் சகோதரர் சூரங்குடி ஜமால் முகைதீன் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார். கன்னியாகுமரி மாவட்டம் முஸ்லிம் ஜமாத் கூட்டமைப்பின் தக்கலை நகரச் செயலாளராக எ. பி. எம். எ.முஸ்லிம் ஜமாஅத் முன்னாள் துணை தலைவரும் தக்கலை நகர வர்த்தக சங்கத்தின் பொருளாளருமான அன்பு சகோதரர் கலீல் ரஹ்மான் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட விபரத்தை கன்னியாகுமரி மாவட்ட முஸ்லிம் ஜமாஅத் கூட்டமைப்பு நிர்வாகக் கமிட்டி வெளியிட்டது.