கன்னியாகுமரி மாவட்ட முஸ்லிம் ஜமாஅத் கூட்டமைப்பு மாவட்டம் முழுவதும் உள்ள எல்லா ஜமாஅத்களிலும் இப்போதைய பொறுப்பாளர்களையும் முன்னாள் பொறுப்பாளர்களையும் சமுதாய ஆர்வலர்களையும் மாவட்டம் முழுவதும் பொறுப்புகளுக்கு அறிவித்து வருகிறது.
அதன் தொடர்ச்சியாக இன்று கன்னியாகுமரி மாவட்ட முஸ்லிம் ஜமாஅத் கூட்டமைப்பு ஆலோசனை கமிட்டி நிர்வாகியாக வேர்கிளம்பி முஸ்லிம் முஹல்லம் மஸ்ஜிதுல் ரஹ்மான் முன்னாள் தலைவர் அன்பு சகோதரர் முகமது அக்பர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மாவட்டம் முழுவதும் உள்ள படித்த பட்டதாரிகள், முன்னாள் அரசு உயரதிகாரிகள், பேராசிரியர்களை கொண்டு உருவாக்கும் கல்விகுழுவிற்க்கு மாவட்டம் முழுவதும் பொறுப்பாளர்களை நியமித்து வருகிறது அதன் தொடர்ச்சியாக இன்று கன்னியாகுமரி மாவட்ட முஸ்லிம் ஜமாஅத் கூட்டமைப்பின் மாவட்ட கல்விக்குழு துணைச் செயலாளராக அரிப்பு தெரு முஸ்லிம் ஜமாஅத்தை சார்ந்த ஓய்வுபெற்ற காவல்துறை உதவி ஆய்வாளர் அன்பு சகோதரர் செய்யது அபூபக்கர் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் ஆலிம்களை ஒருங்கிணைத்து கன்னியாகுமரி மாவட்ட முஸ்லிம் ஜமாத் கூட்டமைப்பு ஆலிம் கவுன்சில் உருவாக்கப்பட்டுள்ளது இதனுடைய நோக்கம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆலிம்களுக்கும் அவர்களுடைய வாழ்வாதாரம் உயர்த்திடவும் அவர்களுக்கு அரசிடமிருந்து கிடைக்க கூடிய அனைத்து சலுகைகளையும் முறையாக பெற்றிடவும் அவர்களுடைய நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றவும் அத்துடன் இந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து இஸ்லாமிய சகோதரர்களுக்கும் தீன் கல்வி பயில ஊக்குவிக்கவும், பயிற்றுவிக்கவும், நமது நியூஸ் சேனல் பத்திரிகை போன்றவற்றில் வாரந்தோறும் ஆலிம்களின் சொற்பொழிவுகள் இந்த மாவட்டம் முழுவதும் சென்றடைந்திடவும், கன்னியாகுமரி மாவட்ட முஸ்லிம் ஜமாஅத் கூட்டமைப்பு ஆலிம் கவுன்சில் உருவாக்கப்பட்டுள்ளது இந்த கவுன்சிலுக்கு இன்றைய தினம் கன்னியாகுமரி மாவட்ட முஸ்லிம் ஜமாஅத் கூட்டமைப்பின் ஆலிம் கவுன்சில் மாவட்ட செயலாளராக இனையம் முஸ்லிம் ஜமாஅத்தை சார்ந்த ஆலிம் நிசார் ஆலிம் அரூசி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மேற்கண்ட நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கப்பட்ட விவரத்தை கன்னியாகுமரி மாவட்ட முஸ்லிம் ஜமாஅத் கூட்டமைப்பு நிர்வாகக் கமிட்டி வெளியிட்டது