கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி சந்தையில் இன்று (04-07-2020) ஒரே நாளில் 40 வியாபாரிகளுக்கு கொரானா தொற்று ஏற்பட்டுள்ள சம்பவம் பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடக்கத்தில் கட்டுக்குள் இருந்த கொரானா கடந்த ஒருவாரமாக வேகமாக பரவி வருகிறது. மாவட்டம் முழுவதும் 40க்கும் மேற்பட்ட இடங்களில் சீல் வைக்கப்பட்டுள்ளன. நாகர்கோவில் வடசேரி காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளர் மற்றும் 4 ஊர்காவல் படையினருக்கு கொரானா தொற்று ஏற்பட்டதையொட்டி காவல் நிலையம் மூடப்பட்டது.
இந்நிலையில் வடசேரி பேருந்து நிலையத்தில் தற்காலிகமாக செயல்பட்டுவரும் சந்தையில் ஒரு வியாபாரிக்கு ஏற்பட்ட தோற்று தற்போது 40 வியாபாரிகளுக்கு பரவி, இன்று ஒரே நாளில் 67 பேருக்கு தொற்று ஏற்பட்டது. இதையடுத்து சந்தையின் வாயில்களுக்கு சீல் வைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதே போன்று மாவட்டத்தின் பல பகுதிகளிலும் கொரானா தொற்று வேகமாக பரவி வருவதால் ஆங்காங்கே தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.






0 Comments