ரஹ்மத் கார்டன் நல அறக்கட்டளை மற்றும் கன்னியாகுமரி மாவட்ட முஸ்லிம் ஜமாத் கூட்டமைப்பும் இணைந்து கொரோனா நோய் எதிர்ப்பு பரிசோதனை முகாம் அறக்கட்டளை செயலாளரும், கன்னியாகுமரி மாவட்ட முஸ்லிம் ஜமாத் கூட்டமைப்பின் மாவட்ட வர்த்தகப்பிரிவு தலைவருமான MAK சலீம் தலைமையில் ரஹ்மத் கார்டன் ஜும்மா பள்ளி வளாகத்தில் வைத்து நடைப்பெற்றது.
அறக்கட்டளை தலைவர் முஹைதீன் ஷாகுல்ஹமீது,துணை தலைவர் இனயம் நியாஸ்,துணை செயலாளர் Dr.முஹம்மது ஷாபி, பொருளாளர் முகைதீன் பாட்சா,பெரியவர் PRO பஷீர்,நிர்வாகிகள் Er.சேக் முஹம்மது,அமீர், SA லத்தீப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளர்களாக கன்னியாகுமரி மாவட்ட முஸ்லிம் ஜமாத் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் Ln.P.ஹிமாம் பாதுஷா,ஜமாத் கூட்டமைப்பின் மாவட்ட செய்தி தொடர்பாளர் "சேவை திலகம்" SR ஹாஜிபாபு Fr.MC ஆகியோர் பொதுமக்களுக்கு உடல் வெப்ப, ஹீமோகுளோபின்,நாடி துடிப்பு,கபம்,இரத்த அழுத்தம் உள்ளிட்ட பரிசோதனைகளை துவக்கிவைத்து சிறப்பித்தனர்.சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டதில் 268 நபர்கள் பரிசோதனை மேற்கொண்டனர்.
அனைவருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி மருந்தான கப சுர குடிநீர், சத்து மாத்திரைகள் மற்றும் முககவசம் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டது. காலை 10.00 மணியளவில் துவங்கப்பட்டு மதியம் 1.30 மணிவரை தொடர்ந்து நடைப்பெற்றது.