கன்னியாகுமரி மாவட்ட முஸ்லிம் ஜமாத் கூட்டமைப்பின் நிர்வாகிகள் அறிவிப்பு
கன்னியாகுமரி மாவட்ட முஸ்லிம் ஜமாஅத் கூட்டமைப்பின் செயற்குழு உறுப்பினராக தாமரை குளம் நவ்மியாபுரம் முஸ்லீம் ஜமாஅத் தலைவர் அன்பு சகோதரர் முஹம்மது ராசிக் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கன்னியாகுமரி மாவட்ட முஸ்லிம் ஜமாத் கூட்டமைப்பின் இஸ்லாமிய வழக்கறிஞர் பிரிவு மாவட்ட துணை தலைவராக புன்னர்குளம் முஸ்லிம் ஜமாஅத்தை சார்ந்த தமிழ்நாடு மக்கள் நுகர்வோர் பேரவை குமரி மாவட்ட தலைவராக இருக்கும் சகோதரர் வழக்கறிஞர் அக்பர் அலி அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கன்னியாகுமரி மாவட்ட முஸ்லிம் ஜமாஅத் கூட்டமைப்பின் மாவட்ட ஆலிம் கவுன்சில் மாவட்ட தலைவராக கன்னியாகுமரி முஸ்லிம் ஜமாஅத்தைசார்ந்த முகவை அறக்கட்டளை தாயி இமாம் இப்ராஹிம் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட விவரத்தை கன்னியாகுமரி மாவட்ட முஸ்லிம் ஜமாஅத் கூட்டமைப்பு நிர்வாக கமிட்டி வெளியிட்டது