நாடு முழுவதும் உள்ள கொரோனா தொற்றால் பல லட்சம் பாதிக்கபட்டுள்ளனர். பெரும்பாலான மக்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் ஐதராபாத்தில் காந்தி மருத்துவமனையில் கொரோனா தொற்று பாதிக்கபட்டு பெண் ஒருவர் சிகிச்சைகாக அனுமதிக்கபட்டுள்ளார்.
பின் சிகிச்சை முடிந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டில் இருந்த அவரது மகன் மற்றும் மருமகள் கொரோனா அச்சம் காரணமாக அவரை வீட்டிற்குள் சேர்க்க மறுத்துள்ளனர். இதன் காரணமாக அவர் போலீசாரை அழைத்து உதவி கேட்டுள்ளார். ஆனால் போலீசார் உதவியாக தெரியவில்லை. யாரும் உதவ முன் வராத நிலையில் இரவு முழுவதும் வீட்டு வாசலில் அமர்ந்த படியே கழித்துள்ளார்.

இதைபோல மகாராஷ்டிரா மாநிலத்திலும் 80 வயது தாயை கொரோனா அச்சம் காரணமாக மகன் வீட்டிற்குள் அனுமதிக்காத சம்பவம் அரங்கேறியுள்ளது.