கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் செட்டிகுளத்தில் மென்ஸ்வேர் கடையில் நூதன கொள்ளை.
நாகர்கோயில் செட்டிகுளத்தில் இயங்கும் ஒரு மென்ஸ்வேர் கடையில் நேற்று காலை 12 மணியளவில் கடையின் உரிமையாளர் தனது 16 வயது மகனை கடையில் இருத்திவிட்டு வெளியே சென்ற நேரத்தில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் துணி எடுப்பது போல் அந்த கடையில் நுழைந்து பேன்ட் சர்ட் போன்ற துணிகளை வாங்கிவிட்டு அக்கவுண்டில் போன்பேயில் பணத்தை போடுகிறேன் 800 ரூபாய் கையில்தா என கேட்டு வாங்கிய வாலிபர் பணத்தையும் துணியையும் எடுத்துகொண்டு திடீரென்று ஓட்டம்பிடித்தார்.
இதைப்பார்த்து செய்வதறியாது திகைத்த மகன் தந்தைக்கு தொலைபேசியில் தகவலை சொல்ல தந்தை வந்து கோட்டார் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
கடையில் உள்ள கேமராவில் அந்த வாலிபரின் வீடியோ புகைப்படங்கள் காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.






0 Comments