நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையம் மீனாட்சிபுரம் பேருந்து நிலையம் மற்றும் தக்கலை மார்த்தாண்டம் பேருந்து நிலையம் பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

கடந்த சில மாதங்களாக பஸ்கள் இயக்கம் இன்றி இருந்த நிலையில் சில நாட்களாக அரசு பேருந்துகள் இயக்கப்பட்டன. மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும் வகையிலும் பாயிண்டு பாயிண்ட் பேருந்துகளும் மாவட்டத்திலுள்ள நகரப் பேருந்துகளும் குறைந்த அளவில் இயங்கி வந்தன. இதனால் பஸ் ஸ்டாண்டில் ஓரளவு பயணிகள் கூட்டம் காணப்பட்டது. சமூக இடைவெளியின்றி விதிமுறை மீறல் காரணமாக வைரஸின் தாக்கம் இருந்துவந்தது.
தமிழகம் முழுவதும் இதே நிலை இருந்து வந்ததால் ஊரடங்கு நீக்கப்பட்ட நிலையில் அரசு பஸ்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள் அவதிக்கு உள்ளாகினர்.
அன்றாட வேலைக்கு செல்வோர் வியாபாரம் செய்ய செல்வோர் அனைவரும் பாதிக்கப்பட்டனர். இன்று முதல் வியாபார நிறுவனங்களின் விற்பனை நேரமும் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் மாவட்டம் முழுவதும் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர். இன்னும் ஒரு மாத காலம் எப்படி சமாளிக்கப் போகிறோம் என்ற நிலைப்பாட்டில் மாவட்ட நிர்வாகம் என்னென்ன உதவிகள் செய்து தரும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கின்றனர்.






0 Comments