நாகர்கோவில் மாநகராட்சி மற்றும் குளச்சல், பத்மநாபபுரம், குழித்துறை நாகராட்சிகள், பேரூராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு பயிற்சி முகாம் நேற்று மற்றும் இன்று நடக்கிறது.

கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே உத்தரவின் பேரில் கொரோனா வைரஸ்சால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நபர்களின் உடலை பாதுகாப்பான முறையில் தகனம் செய்வது குறித்து நாகர்கோவில் மாநகராட்சி, குளச்சல், குழித்துறை, பத்மநாதபுரம் ஆகிய நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு நேற்று துவங்கி இன்று வரை 2 நாட்கள் சிறப்பு பயிற்சி முகாம் புளியடி அமிர்தம் எரிவாயு தகன மேடையில் வைத்து நடக்கிறது.
நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் அறிவுறுத்தலின்படி மாநகராட்சி நல அலுவலர் கின்சால் கொரோனா வைரஸ் பேரிடர் காலத்தை எதிர்கொள்வது குறித்து பயிற்சி அளித்தார். உடலை பாதுகாப்பான முறையில் தகனம் செய்வது குறித்து சுகாதார ஆய்வாளர் சத்யராஜ் செயல்முறை பயிற்சி அளித்தார்.
கொரோனா வைரஸ்சால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவரின் உடலை தகனம் செய்யும் பொழுது தூய்மைப் பணியாளர்கள் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆசாரிப்பள்ளம் அரசு மெடிக்கல் காலேஜ் ஆஸ்பத்திரி உறைவிட மருத்துவ அலுவலர் ஆறுமுக வேலன் விளக்கினார்.






0 Comments