நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் அருகே பள்ளிவிளை ஜங்ஷனில் காமராஜர் மார்பளவு சிலை மெயின் ரோட்டில் உள்ளது . இந்த சிலையின் மூக்கு பகுதி சேதப்படுத்தப்பட்டு இருப்பது குறித்து வடசேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
காமராஜர் சிலை சேதப்படுத்தி இருப்பது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த எம். பி வசந்தகுமார் தலைமையில் எம்எல்ஏக்கள் ராஜேஷ் குமார், விஜயதரணி, கிழக்கு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சிலை சேதப்படுத்தப்பட்டது குறித்து வடசேரி போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.