கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் வேகமாக பரவி வருகிறது. மாநகராட்சி ஊழியர் ஒருவருக்கு, தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்களுக்கு, தலைமை தபால் நிலையம் ஜீப் டிரைவருக்கு, வங்கி ஊழியருக்கு என்று அதிகரித்து கொண்டு செல்கிறது. இந்நிலையில், ஊட்டுவாழ்மடம் வசந்த் நகர் பகுதியை சேர்ந்த 36 வயதுடைய பெயிண்டர் ஒருவர் விருதுநகரில் இருந்து வந்தவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

வடசேரி ஆட்டுக்கடை முடுக்கு பகுதி 48 வயதுடைய கூலி தொழிலாளிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் உத்தரவுபடி, மாநகர் நல அலுவலர் கிங்சால் அறிவுரைப்படி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் வீடுகளில் சுகாதார ஆய்வாளர்கள் பகவதி பெருமாள், மாதேவன்பிள்ளை தலைமையில் மாநகராட்சி பணியாளர்கள் கிருமிநாசினி அடித்து தனிமை ஸ்டிக்கர் ஒட்டி வீடுகளை தனிமைப்படுத்தி தடுப்பு நடவடிக்கைக்கான முன்னேற்பாடுகளை செய்தனர்.






0 Comments