நாகர்கோவில் கொரோனா பராமரிப்பு மையத்தில் இரண்டாவது நாளாக நோயாளிகள் போராட்டம் காலை 10 மணி வரையிலும் உணவு வழங்க வில்லை என புகார்.

நாகர்கோவில் கொரோனா பராமரிப்பு மையத்தில் இரண்டாவது நாளாக நோயாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர் தங்களுக்கு காலை 10மணி வரையிலும் உணவு வழங்கவில்லை என அவர்கள் கூறி போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நோய்தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது இதன் காரணமாக 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் இவர்கள் மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனைகள் தனியார் மருத்துவமனைகள் அரசு கல்லூரிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் நாகர்கோவில் கோணத்தில் பொறியியல் கல்லூரியில் கொரோனா பராமரிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மையத்தில் சுமார் 250க்கும் மேற்பட்டவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர் இவர்களுக்கு நேற்று இரவு தரமான உணவு வழங்காத நிலையில் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் இன்று காலையிலும் அவர்களுக்கு உணவு வழங்கப்படவில்லை இதனால் அந்த மையத்தில் உள்ளவர்கள் அதிகாரிகளை தொடர்பு கொண்டபோது அதிகாரிகள் தரப்பில் எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்மேலும் கழிவறை போன்றவைகள் சுத்தமாக இல்லை என்றும் அவர்கள் சுத்தம் செய்யப்பட்டு வரவில்லை என்றும் இதனால் தொற்றுக்கள் பரவுவதற்கு மேலும் வாய்ப்பு உள்ளதாகவும் அவர்கள் புகார் கூறினார் இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது சிறு குழந்தைகளை கையில் வைத்துக்கொண்டு காலை 10 மணி வரை உணவு வழங்காமல் அதிகாரிகள் தங்களை வேதனைக்கு உட்படுத்துவது அவர்கள் தெரிவித்துள்ளனர்






0 Comments