நாகர்கோவில் இஎஸ்ஐ ஆஸ்பத்திரி, சவுத் இந்தியா பேங்க் ஆகியவற்றில் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாகர்கோவில் இஎஸ்ஐ ஆஸ்பத்திரியில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதும், நாகர்கோவில் மீட் தெருவில் உள்ள சவுத் இந்தியன் வங்கியில் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் உத்தரவுப்படி மாநகர் நல அலுவலர் கின்சால் மேற்பார்வையில் சுகாதார ஆய்வாளர் பகவதி பெருமாள் தலைமையில் மாநகராட்சி பணியாளர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.






0 Comments