கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா கவனிப்பு மையத்தில் சிகிச்சையில் இருந்த 42 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பினர்.
கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் அருகே தனியார் பள்ளியில் கொரோனா கவனிப்பு மையத்தில் சிகிச்சையில் இருந்த 42 பேர் முழுவதுமாக குணமடைந்து வீடுகளுக்கு திரும்பினர். அவர்களது உடல்நிலையை மேம்படுத்தும் பொருட்டு அமுக்கரா சூரணம் மற்றும் நெல்லிக்காய் லேகியம் ஆகிய சித்த மருந்துகள் வழங்கப்பட்டு வழியனுப்பி வைக்கப்பட்டனர்.