கோவையில் இருந்து மார்த்தாண்டத்துக்கு கடத்தி வரப்பட்ட பயோ டீசல் மற்றும் டேங்கர் லாரியை
பறிமுதல் செய்த போலீசார் டிரைவரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

கோவையில் இருந்து மார்த்தாண்டம் அருகே திக்குறிச்சி பகுதிக்கு டேங்கர் லாரியில் பயோ டீசல்
கடத்தி வரப்பட்டதாக மார்த்தாண்டம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து
மார்த்தாண்டம் போலீசார் திக்குறிச்சி பகுதிக்கு சென்று டேங்கர் லாரியை சோதனை செய்தனர்.
அப்போது அனுமதியின்றி கோவையில் இருந்து பயோ டீசல் கொண்டு வரப்பட்டது தெரிய வந்தது.
இதை தொடர்ந்து லரியையும், பயோ டீசலையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக லாரி டிரைவர் சேலம் பகுதியை சேர்ந்த காளியண்ணன் என்பவரை பிடித்து போலீசார்
தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.






0 Comments