மணிப்பூர் மாநிலத்தில் பிறந்த குழந்தைகளுக்கு கோவிடா, கோவினா, குவாரண்டினா என்ற பெயர்களை சூட்டியுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கோவிடா, கோவினா, க்வாரண்டினா - மணிபூரில் பிறந்த குழந்தைகள்
பொதுவாக பிறந்த குழந்தைகளுக்கு அன்றைய டிரண்டுக்கு ஏற்றார் போல் பெயர் வைப்பது என்பது இயல்பானது. அதேபோல கரோனா காலத்தை நினைவூட்டும் படி மணிபூரின் கேங்போக்பி மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்படும் மையங்களில் சிகிச்சையில் இருக்கும் மூன்று பெண்கள் தங்களது மூன்று ஆரோக்கியமான குழந்தைகளை பெற்றெடுத்துள்ளனர் என ஒரு சுகாதார அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதில் ஆண் குழந்தைகளும் ஒரு பெண் குழந்தையும் இங்கு பிறந்துள்ளது. ஆண்குழந்தைகளுக்கு இமானுவேல் குவாரண்டினோ, கோவிடா என பெயர் சூட்டப்பட்டுள்ளது. அதேபோன்று பெண் குழந்தைக்கு கோவினா என பெண் குழந்தைக்கு பெயரிடப்பட்டுள்ளது.
மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பிற மருத்துவ ஊழியர்கள், பெற்றோர்கள் சேர்ந்து முதலில் பிறந்த ஆண் குழந்தைக்கு இமானுவேல் க்வாரண்டினோ என பெயரிட்டனர். அதற்குப் பிறகு பிறந்த பெண் குழந்தை கோவினா என்றும் ஆண் குழந்தை கோவிடா என்று பெயரிடப்பட்டனர். மேலும் இந்த மூன்று குழந்தைகளும் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.






0 Comments