வேலூர் மாவட்டம் அரக்கோணத்தை அடுத்துள்ள காட்டுப்பாக்கம் அம்பேத்கார் நகர் பகுதியில் வசித்து வருபவர் இளங்கோவன். இவரது வயது 35. இவர் சென்னை ஆவடியில் உள்ள காவல்துறை பயிற்சி முகாமில் சிறப்பு காவல் அதிகாரியாக பணியாற்றி வருகின்றார். இவரது மனைவி பெயர் ராஜேஸ்வரி இவர்களுக்கு 2 மகள்கள் இருக்கின்றார்கள்.

நேற்று முன்தினம் இரவு நேரத்தில் இளங்கோவன் தனக்கு ஒதுக்கப்பட்ட சென்னை எழும்பூர் கண்காணிப்பு பணிக்கு தனது இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு சென்றிருந்தார்.அந்நிலையில் திருவள்ளுர் பகுதிக்கு அடுத்துள்ள இளஞ்சேரி சாலை வளைவில் திரும்பியுள்ளார். அப்போது எதிர்பாராமல் அவரது இருசக்கர வாகனம் சாலையோரத்தில் இருக்கும் மின்கம்பத்தில் மோதியது.
இதில் நிலைதடுமாறி சாலையில் விழுந்தார்.அவருக்கு தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் காவல் அதிகாரி இளங்கோவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், இவருக்கு பின்தொடர்ந்து வந்த மற்றொரு இருசக்கர வாகனமும் காவல் அதிகாரியின் வாகனம் மீதி மோதி விபத்தானது.
இந்த விபத்தில், பொன்னேரி பகுதியை சேர்ந்த வீரன் (48) என்பவரும் மேலும் அவரது நண்பர் ராணிப்பேட்டையை சார்ந்த வேலாயுதம் (38) ஆகிய இருவரும் லேசான காயத்துடன் தப்பினர். விபத்தை கண்ட அப்பகுதி மக்கள் காவல் துறையினருக்கு உடனே தகவல் தெரிவித்தார்கள்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த அதிகாரிகள், காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உயிரிழந்த காவல் அதிகாரியின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காவல் அதிகாரியின் உயிரிழப்பு பெரும் சோகத்தினை அவரது குடும்பத்தினர்க்கும், அவருடன் பணியாற்றிய காவல்துறை அதிகாரிகளுக்கும் ஏற்படுத்தியுள்ளது.






0 Comments