உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், கொரோனா வைரசை கட்டுப்படுத்த உலக நாடுகள் போராடி வருகின்றன. இந்த வைரசுக்கான தடுப்பூசி மற்றும் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் முயற்சியில் பல்வேறு நாடுகளின் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில் கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடித்து, அதனை மனிதர்கள் மீது செலுத்தி வெற்றியடைந்துள்ளதாக ரஷியா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தடுப்பு மருந்து பரிசோதனையில் வெற்றி பெற்ற முதல் நாடு என்ற பெருமையை ரஷ்யா பெற்றுள்ளது. இதுபற்றி ரஷிய செய்தி நிறுவனமான ஸ்புட்னிக் அதிகாரப்பூர்வ செய்தியில்,
செச்சேனோவ் ஃபர்ஸ் மாஸ்கோ ஸ்டேட் மருத்துவ பல்கலைக்கழகத்தில் மனிதர்கள் மீது உலகின் முதல் கொரோனா தடுப்பு மருந்தை செலுத்தி பரிசோதிக்கப்பட்டது. இதில் முழு வெற்றி கிடைத்திருக்கிறது. இதன்மூலம் குணமடைந்தவர்களின் முதல் குழுவினர் வரும் 15ஆம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்படவுள்ளனர். இரண்டாம் குழுவினர் 20 ஆம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.






0 Comments