அஞ்சல் துறையில், ஆயுள் காப்பீடு உள்ளிட்ட காலாவதியான பாலிசிகளைப் புதுப்பிக்க வாய்ப்பு வழங்கப் பட்டுள்ளது.
அஞ்சல் ஆயுள் காப்பீடு மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்டங்களில் சேர்ந்து பல்வேறு வகையான காரணங்களால் தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு மேலாக பிரீமியம் தொகை செலுத்த இயலாமல், காலாவதியான பாலிசிகளை, 2020 ஜனவரி 1ம் தேதிக்கு பின்னர் புதுப்பிக்க இயலாது . இப்போது காலாவதியான பாலிசிகளைப் புதுப்பிக்க, அஞ்சல் துறை ஒரு வாய்ப்பினை வழங்கி உள்ளது. அதன்படி பொதுமக்கள், தங்கள் காலாவதியான பாலிசிகளை பிரீமிய புத்தகம் மற்றும் உடல் நலத்திற்கான மருத்துவ சான்றுகளுடன் அருகில் உள்ள தலைமை, துணை, கிளை அஞ்சலகங்களை அணுகி வரும் ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் புதுப்பித்துக்கொள்ளலாம் என்று கன்னியாகுமரி கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் கணேஷ் குமார் தெரிவித்துள்ளார்.