குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே விவசாயக் கடன்கள் வழங்குவதில் குளறுபடிகள் நிலவுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கக்கோரி விவசாயிகள் சங்க நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தனர்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அளித்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:-
கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் தாலுகாவிற்குட்பட்ட இரவிபுதூர்கடை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டவர்கள் இடையே கோஷ்டி சண்டை நிலவிவருகிறது. இதனால் வாங்கிய கடனை அடைத்த பின்னரும் புதிய கடன்கள் கிடைக்காமல், நகைகளை அடகு வைத்து விவசாயம் செய்யும் அவல நிலைக்கு தள்ளப்பட்டு விவசாயிகள் அவதி அடைந்து வருகின்றனர்.
விவசாயிகளுக்கு உரிய குறுகிய கால கடன், மத்திய கால கடன், சுய உதவிக் குழுக்களுக்கான கடன் எதுவும் வழங்காமல் நிர்வாகம் செயல்படாத நிலையில் உள்ளது. எனவே, இந்த நிர்வாக குழுவை கலைத்து புதிய நிர்வாக குழுவை தேர்வு செய்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும் என அந்த மனுவில்
கூறப்பட்டுள்ளது.






0 Comments