காஷ்மீரில் பா.ஜ. பிரமுகர் அவரது தந்தை, சகோதரர் ஆகியோர் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதனால் அங்கு பதற்றம் நிலவுகிறது.காஷ்மீரின் வடக்கு மாவட்டமான பந்திப்போராவைச் சேர்ந்த ஷேக் வாசிம் பாரி, இவர் பா.ஜ. மாவட்ட தலைவராக உள்ளார். இவரது சகோதரர் உமர் சுல்தான், தந்தை பஷீர் அகமது ஷேக். இவர்கள் அப்பகுதியில் கடை வைத்துள்ளனர். சம்பவத்தன்று அடையாளம் தெரியாத நபர்கள் திடீரென கடைக்குள் புகுந்து துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில் மூவரும் உயிரிழந்ததாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர்.

கொலையாளிகள் பயங்கரவாதிகள் என தகவல் வெளியாகியுள்ளது. ஷேக் வாசிம் பாரிக்கு ஏற்கனவே அச்சுறுத்தல் இருந்ததால், உள்ளூர் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. போலீசார் பாதுகாப்புக்கு இல்லாத நேரம் பார்த்து இந்த சம்பவம் நடந்துள்ளது. விசாரணை நடந்து வருகிறது என போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.






0 Comments