கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்த வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் கடும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், தலைநகர் டெல்லியில் இன்று மேலும் 2,033 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் டெல்லியில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,04,864 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 48 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனா பலி எண்ணிக்கை 3,213 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து இன்று 3,982 பேர் டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர்.

இதன்மூலம் இதுவரை 78,199 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். டெல்லியில் தற்போது 23,452 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக டெல்லி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.