கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்த வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் கடும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கையில் மராட்டியம் முதலிடத்தில் உள்ளது.
இதனைத்தொடர்ந்து தமிழகம், டெல்லி மற்றும் குஜராத் ஆகியவை உள்ளன. மராட்டியத்தின் மும்பை, புனே மற்றும் நாக்பூர் உள்ளிட்ட நகரங்களில் கொரோனா பாதிப்பு அதிக அளவில் காணப்படுகிறது.

இந்நிலையில், மராட்டியத்தில் கடந்த 48 மணிநேரத்தில் 278 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் பலி எண்ணிக்கை 71 ஆக உயர்ந்து உள்ளது. 1,113 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதனையடுத்து, மராட்டிய காவல் துறையில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

மராட்டியத்தில் ஊரடங்கு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவல் துறையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீட்டுக்கு சென்றுள்ளனர்.