ரஷ்யாவின் அதிபராக விளாடிமர் புதின் 2036-ம் ஆண்டு வரை தொடர மக்கள் ஆதரவளித்துள்ளதால் அவருக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பல உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ரஷ்யாவில் அதிபராக இரண்டு முறை மட்டுமே ஒருவர் தொடர முடியும். ஆனால் இதனை மாற்றி அரசியலமைப்பை திருத்துவதற்கு நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் அந்நாட்டு மக்கள் பெருமளவில் ஆதரவு அளித்ததாக கூறப்படுகின்றது. இதனையடுத்து 2036-ம் ஆண்டு வரை இப்போது அதிபராக இருக்கும் புதின் அந்த பதவியில் நீட்டிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில் 78% பேர் அரசியலமைப்பை திருத்துவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 22% பேர் இந்த சட்டத்துக்கு எதிராக வாக்களித்துள்ளனர். மேலும், இந்த அரசியலமைப்பை மாற்றக்கூடாது என ரஷ்யாவில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
பொதுவாக இரண்டு முறைக்கு மேல் ரஷ்யாவின் அரசியலமைப்பு சட்டப்படி ஒருவர் அதிபராக பதவி வகிக்க முடியாது. ஆனால் இப்போது அந்த அரசியலமைப்பை மாற்ற மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. புதிய அரசியலமைப்பு சட்டப்படி 6 ஆண்டுகள் கொண்ட இரண்டு பதவி காலங்களுக்கு அதிபராக தேர்ந்தெடுக்கப்படும் நபர் நீடிக்க முடியும். 2014-ம் ஆண்டுடன் புதினின் பதவிக்காலம் முடிவதை அடுத்து, அடுத்த 12 ஆண்டுகளுக்கும் அவரே அதிபராக தொடரலாம்.






0 Comments