நாகர்கோவில் அவ்வை சண்முகம் சாலையில் கட்டபொம்மன் சந்திப்பு அருகே ரோடு குண்டும் குழியுமாக பழுதடைந்து கிடப்பதால் போக்குவரத்து அடிக்கடி தடைபட்டு பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

நாகர்கோவில் மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளால் நகரில் முக்கியமான ரோடுகள் முதல் தெருக்கள் வரை தோண்டப்பட்டு பழுதடைந்த நிலையில் காணப்பட்டன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு விபத்துக்களும் ஏற்பட்டு வந்தது. தற்பொழுது பணிகள் முடியும் தருவாயில் நகரில் ஒவ்வொரு ரோடாக சீர் செய்யப்பட்டு வருகிறது. நாகர்கோவில் அவ்வை சண்முகம் சாலை கட்டப்பொம்மன் சந்திப்பு அருகே ரோடு குண்டும் குழியுமாக பழுதடைந்த நிலையில் உள்ளது. இப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து தடை ஏற்படுவதுடன் விபத்துக்களும் ஏற்பட்டு வருகிறது. சமீபத்தில் மணிமேடை அருகே பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடந்து வந்ததால் அனைத்து வாகனங்களும் கட்டபொம்மன் சந்திப்பு வழியாக விடப்பட்டது. இது போல் மீனாட்சிபுரம் மற்றும் ஒழுகினசேரியிலும் பல இடங்களில் ரோடு பழுதடைந்த நிலையில் உள்ளது.
கட்டபொம்மன் சந்திப்பு அருகே பழுதடைந்த பகுதி அவ்வை சண்முகம் சாலையில் பழுதடைந்துள்ள பகுதிகளை உடனே சீர் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் விரும்புகின்றனர்.






0 Comments