அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அந்நியச் செலாவணி சந்தையில் வாரத்தின் இறுதி நாளான வெள்ளிக்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் 21 காசுகள் சரிவை சந்தித்தது. இதுகுறித்து வா்த்தகா்கள் கூறியதாவது:-

உள்நாட்டு பங்குச் சந்தைகளில் முதலீட்டு வரத்து குறைந்தது டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பில் அழுத்தத்தை ஏற்படுத்தியது. மேலும், வங்கிகளும் டாலரை வாங்குவதற்கு போட்டி போட்டதையடுத்து அதன் மதிப்பு உயா்ந்து காணப்பட்டது. அந்நியச் செலாவணி சந்தையில் வா்த்தகத்தின் தொடக்கத்தில் ரூபாய் மதிப்பு 75.16-ஆக இருந்தது. இது வா்த்தகத்தினிடையே அதிகபட்சமாக 75.12 வரையிலும், குறைந்தபட்சம் 75.33 வரையிலும் சென்றது. இறுதியில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 21 காசுகள் சரிந்து 75.20-ஆனது. வியாழக்கிழமை ரூபாய் மதிப்பு 74.99-ஆக இருந்தது என வா்த்தகா்கள் தெரிவித்தனா்.






0 Comments