கன்னியா குமரி மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக பத்ரி நாராயண் நியமனம் செய்யப்பட்டு எஸ்பி ஆக பதவியேற்கிறார்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளராக கடந்த காலங்களில் பணியாற்றி வந்த ஸ்ரீநாத் சென்னை குற்றப்புலனாய்வு துறை கண்காணிப்பாளராக பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்திற்கு திருப்பூர் மாநகர துணை கமிஷனராக பணியாற்றிய பத்ரிநாராயண் குமரிமாவட்ட புதிய எஸ்பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என காவல்துறை அதிகாரிகள் செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.

மேலும் குமரி மாவட்டத்தில் உதவி காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த ஜவகர் பதவி உயர்வு பெற்று சென்னை அண்ணாநகர் துணை கமிஷனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.குமரி மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள பத்ரிநாராயண் நாளை மறுநாள் பதவி ஏற்பார் என கூறப்படுகிறது.