நித்திரவிளை அருகே வாலிபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நம்பாளி அருகே பஞ்சகுளம் பகுதியை சேர்ந்த 23 வயது வாலிபர் நித்திரவிளை லோடு ஆட்டோ ஸ்டேண்ட் அருகில் உள்ள செருப்பு கடையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கடந்த ஒரு வாரம் முன்பு காய்ச்சல் வந்துள்ளதால் நித்திரவிளை பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். காய்ச்சல் அதிகமாக இருந்துள்ளதால் ஆறு தேசம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று பரிசோதனை செய்தபோது அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதை தொடர்ந்து அவர் வேலை பார்த்து வந்த கடை சுகாதார துறை அதிகாரிகளால் அடைக்கப்பட்டது. இந்த வாலிபர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர். இதனால் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் மற்றும் இவருடன் கடையில் ஒன்றாக வேலை பார்க்கின்றவர்களுக்கும் சளி மாதிரி எடுத்து பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்படும் என்று சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.