கோயம்புத்தூரில் பெரியார் சிலை மீது கடந்த இரு தினங்களுக்கு முன்னர் மர்ம நபர் ஒருவர் காவிச் சாயம் கொட்டினார். இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில், காவிச்சாயத்தை ஊற்றிய பாரத்சேனா அமைப்பைச் சேர்ந்த அருண் கிருஷ்ணன் என்ற இளைஞர் காவல்நிலையத்தில் சரணடைந்தார்.
இந்தநிலையில், கோயம்புத்தூரில் டவுன்ஹால் என்.எச்.சாலையில் உள்ள மாகாளியம்மன் கோயில், ரயில் நிலையம் முன்பு உள்ள விநாயகர் கோயில் கோட்டைமேடு பகுதியிலுள்ள விநாயகர் கோயில் முன்பாக பழைய டயர்களை தீ வைத்தும், கோயில் முன்பு உள்ள பொருள்களையும் சிலர் சேதப்படுத்தியிருந்தனர்.

இதுபோன்ற அடுத்தடுத்து நடைபெற்ற சம்பவத்தால் பரபரப்பை ஏற்பட்டது. பின்னர் நடந்த விசாரணையில் கோயில்களைச் சேதப்படுத்தியது, சேலத்தை சேர்ந்த கஜேந்திரன் என்பவர் தான் என தெரியவந்தது.
இந்நிலையில் கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம் ஆகிய பகுதிகளில் கஜேந்திரனின் புகைபடத்தை கொண்டு 6 தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதனையடுத்து, கோவை மாநகர சிறப்புபடையினர் கஜேந்திரனைக் கைது செய்தனர். அவர், எந்த இயக்கத்தையும் சாராதவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.






0 Comments