நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கழிவு நீர் ஓடைகள், தண்ணீர் குழாய் பதிப்பு பணிகளை ஆணையர் ஆய்வு செய்தார்.
நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட கலுங்கடி பகுதிகளில் உள்ள கழிவு நீரோடைகள், புளியடி பகுதியில் உள்ள பொதுப்பணித்துறையின் ஓடை உடைந்துள்ளதையும், முக்கடல் அணையில் இருந்து தண்ணீர் கொண்டு வருவதற்கு ரயில்வே கிராசிங்கில் நடந்து வரும் குழாய் பதிப்பு பணிகளையும் மாநகராட்சி ஆணையர் ஆஷா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இன்ஜினியர் பாலசுப்பிரமணியன், சுகாதார ஆய்வாளர் தியாகராஜன் உட்பட மாநகராட்சி பணியாளர்கள் உடன் இருந்தனர்.