நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட கிருஷ்ணன் கோவில் அருகே 400 வீடுகள் அடங்கிய பகுதியை கட்டுப்பாட்டு பகுதியாக அறிவித்து சீல் வைக்கப்பட்டது. நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட கிருஷ்ணன் கோவில் அருகே உள்ள அருந்ததி தெரு, காமராஜர் தெரு, மரச்சீனிவிளை ஆகிய பகுதிகளில் உள்ள 400 வீடுகள் அடங்கிய பகுதியை கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டது.

நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் உத்தவுபடி மாநகர் நல அலுவலர் கின்சால் தலைமையில் இந்த பகுதிகளில் உள்ள 285 பேருக்கு சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு உள்ளது. மற்றவர்களுக்கும் தொடர்ந்து சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த பகுதிகளில் மாநகராட்சி சார்பில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு கொரோனா தொற்று தடுப்பு முன்னேற்பாடுகள் எடுக்கப்பட்டு உள்ளது.






0 Comments