கன்னியாகுமரி மாவட்டத்தில் வீட்டு தனிமைப்படுத்தலில் 8185 நபர்கள் வைக்கப்பட்டு உள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆசாரிப்பள்ளம் அரசு மெடிக்கல் காலேஜ் ஆஸ்பத்திரியிலும், களப்பணியாளர்கள் மூலமாகவும், சோதனை சாவடிகள் மூலமாகவும் 55692 நபர்கள் கொரோனா சோதனைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளனர்.
மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் 2954 நபர்களும், வெளியூரில் இருந்து கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வந்த பயணிகளில் 5231 நபர்கள் என்று மொத்தம் 8185 நபர்கள் வீட்டு தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டு உள்ளனர்.