விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நிவாரண உதவி வழங்குவது குறித்து கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன், ஏர் இந்தியா விமான சேவை நிறுவன அதிகாரிகள் இன்று திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களை கூட்டாக சந்தித்தனர். அப்போது அவர்கள் தெரிவித்ததாவது ;

விமான விபத்தில் உயிரிழந்த ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மீட்புப் பணியில் ஈடுபட்டவர்களை தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தியுள்ளோம் என்று பினராயி விஜயன் கூறினார்.
ஏர் இந்தியா சார்பில் , கோழிக்கோடு விமான விபத்தில் உயிரிழந்தவர்களில் 12 வயதுக்கு மேற்பட்டோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணத் தொகையாக வழங்கப்படும். படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என்று மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் அறிவித்துள்ளார்.






0 Comments