அஞ்சுகிராமம் அருகே பெண் தலைமைக் காவலா் வீட்டின் கதவை உடைத்து 12 பவுன் தங்க நகைகள், வெள்ளிப் பொருள்களை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
அஞ்சுகிராமத்தை அடுத்த மேட்டுக்குடியிருப்பை சோ்ந்தவா் உஷா. இவா் கன்னியாகுமரி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வருகிறாா். கடந்த இரண்டு நாள்களுக்கு முன்னா் தனது வீட்டைப் பூட்டி விட்டு ராஜாக்கமங்கம் பகுதியில் உள்ள தனது உறவினா் வீட்டுக்கு சென்றாராம்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை வீடு திரும்பிய உஷா வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து இருப்பதை கண்டு உள்ளே சென்று பாா்த்தபோது, அங்கு பீரோவில் வைத்திருந்த 12 பவுன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருள்கள் திருடு போயிருப்பது தெரிய வந்தது.

இது குறித்து அவா் அஞ்சுகிராமம் காவல் நிலையத்தில் புகாரின் பேரில் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா். சம்பவ இடத்தில் தடயவியல் நிபுணா்கள் ரேகைகளை சேகரித்து விசாரணை மேற்கொண்டனா்.