பத்தாம் வகுப்பு தேர்வில் தன்னை தேர்ச்சி பெற வைத்த தமிழக முதல்வருக்கு நன்றி என்ற வாசகங்களுடன் மாணவர் ஒருவர் போஸ்டர் அச்சடித்துள்ளார்.
கொரோனா ஊரடங்கால் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்த தமிழக அரசு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி அடைந்ததாக அறிவித்தது. அதன்படி கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே குருங்குடி வடக்கு தெரு பகுதியை சேர்ந்த நிஷாந்த் என்ற மாணவர் தேர்ச்சி பெற்றார். அவர் தனது மகிழ்ச்சியை போஸ்டராக வடிவமைத்து முகநூலில் பதிவேற்றி வெளிப்படுத்தியுள்ளார்.

அதில் ஐயா எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு நன்றி எனவும், என்னை பார்த்து ஏளனமாகச் சிரித்த ஆசிரியர்களுக்கு இந்த வெற்றியை சமர்ப்பிக்கிறேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.