கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கன்னியாகுமரி தொகுதி எம்.பி.வசந்தகுமார் இன்று மாலை சென்னையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கன்னியாகுமரி எம்.பி. வசந்தகுமாருக்கு இம்மாதம் 10ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், சென்னையில் கிரீம்ஸ் ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்த அவர் சிகிச்சைப் பலனளிக்காமல் இன்று மாலை உயிரிழந்தார். அவருக்கு வயது 70.
காங்கிரஸ் கட்சியைச் சோந்த வசந்தகுமாா் (70), கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி உறுப்பினராக இருந்தார். இவரது நோமுக உதவியாளா் போத்திராஜுக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, வசந்தகுமாா் எம்.பி., அவரது மனைவி தமிழ்ச்செல்வி (61) ஆகியோருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
இதில், அவா்கள் இருவருக்கும் கொரோனா இருப்பது 10-ம் தேதி உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து, இருவரும் சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். வசந்தகுமாரின் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்ததை அடுத்து செயற்கை சுவாசக் கருவியின் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தகவல்கள் தெரிவிக்கப்பட்ட நிலையில், இன்று மாலை அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.






0 Comments