எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் தமிழகமெங்கும் ஆகஸ்ட் 25 முதல் 31 வரை மத்திய அரசு கொண்டு வரும் புதிய கல்வி கொள்கை (NEP), சுற்று சூழல் மதிப்பீடு அறிக்கை (EIA 2020 ), கிரிமினல் சட்டங்களில் ஆபத்தான திருத்தங்களை கண்டித்து மாநிலம் தழுவிய தொடர் பிரச்சாரமான துண்டுபிரசுர பிரச்சாரம், சுவரொட்டி பிரச்சாரம், வீதி நாடகங்கள்,மக்கள் திரள் ஆர்ப்பாட்டங்கள், தெருமுனை பிரச்சாரம், சமூக ஊடக பிரச்சாரங்களை நடத்துகிறது.
அதன் ஒரு பகுதியாக நேற்று முன்தினம் (27-08-2020) மாலை 04:30 மணிக்கு மணவாளக்குறிச்சி சந்திப்பில் வைத்து தெருமுனை விளக்க பிரச்சாரம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் SDPI கட்சியின் மணவாளக்குறிச்சி கிளை தலைவர் அஸீம் வரவேற்புரை ஆற்றினார். குளச்சல் தொகுதி செயலாளர் அர்ஷாத் தலைமை தாங்கினார்.

கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளர் மணவை சாதிக் அலி முன்னிலை வகித்தார். SDTU தொழிற்சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆரிஃப் பைசல், பாப்புலர் பிராண்ட் ஆஃப் இந்தியா மாவட்ட செயற்குழு உறுப்பினர் மாஹீன் அபூபக்கர், தி மு க குருந்தன்கோடு ஒன்றிய செயலாளர் குட்டிராஜன் ஆகியோர் மத்திய அரசின் மக்கள்விரோத சட்டங்களை எதிர்த்து சிறப்புரையாற்றினர்.

முடிவில் கிளை செயல்வீரர் ரிஸ்வான் நன்றியுரை கூறி கூட்டத்தை நிறைவு செய்தார்.