நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையம் அருகே போதை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு பிரசார நிகழ்ச்சி நடந்தது.
இதில் கலெக்டர் பிரசாந்த் வடநேரே, போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் ஆகியோர் கலந்து கொண்டு “போதை பொருள் இல்லா இந்தியா“ பற்றி விழிப்புணர்வு பிரசாரத்தை தொடங்கி வைத்தனர். அதாவது, போதை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை வாகனங்களில் ஒட்டினர்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நல அலுவலர் சரோஜினி, மதுபோதை மீட்பு மறுவாழ்வு மைய மண்டைக்காடு திட்ட இயக்குனர் அருள்ஜோதி, திருப்புமுனை போதை மறுவாழ்வு மைய இயக்குனர் நெல்சன், நியூ பாரத் நிறுவனர் அருண் உள்பட பலர் கலந்து கொண்டனர்.