சமீபத்தில் ஸ்பூட்னிக் வி என்ற பெயரில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான உலகின் முதல் பதிவு செய்யப்பட்ட தடுப்பூசி குறித்த ஆராய்ச்சியின் மூன்றாம் கட்ட சோதனை 7-10 நாட்களில் தொடங்க உள்ளதாக ரஷ்யா கூறியுள்ளது.
அதிலும் முக்கியமாக இந்த தடுப்பூசியின் இறுதிகட்ட ஆராய்ச்சியில் பல பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பார்கள் என்று ரஷ்யாவின் டாஸ் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.