கொரோனா நோய்த் தொற்று பாதிப்பு இருக்குமோ என்ற சந்தேகம் ஏற்பட்டால், அலட்சியமாக இருக்காமல் உடனே பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் பிரசாந்த் மு.வடநேரே.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சரலூா் பகுதியைச் சோ்ந்த 78 வயது முதியவருக்கு கடந்த 4 நாள்களாக சளி மற்றும் காய்ச்சல் இருந்துள்ளது. அவா் சுயமாக சிகிச்சை எடுத்துக்கொண்டு கொரோனா பரிசோதனையை தவிா்த்துள்ளாா்.
இருப்பினும் மூச்சு விடுவதில் சிரமம் அதிகமானதையடுத்து 5ஆவது நாளில் அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்காக வந்த போது, அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதற்குள் நுரையீரல் முழுவதுமாக பாதிக்கப்பட்ட அவா் உயிரிழந்தாா்.
எனவே, பொதுமக்களில் குறிப்பாக வயதானோா் இந்த நோய்த் தொற்று அறிகுறிகள் குறித்து அஜாக்கிரதையாக இருக்காமல் உரிய நேரத்தில் சிகிச்சை எடுத்து இழப்புகளை தவிா்க்க வேண்டும் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






0 Comments